பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு கலைத்திறன் போட்டிகள்

பிரித்தானியாவில் நவம்பர் 27ல் இடம்பெற இருக்கின்ற தேசிய நினைவெழுச்சி நாளை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினர்களுக்கிடையிலான பேச்சு, கவிதை, ஓவியப்  போட்டிகள் நடைபெறவுள்ளன.

6-7, 8-9, 10-11, 12-13, 14-15, 16-20, 20 அகவைக்கு மேல் என்ற பிரிவுகளுக்கிடையிலான போட்டியாக இவை இடம்பெறவுள்ளன. எமது இளஞ் சிறார்களிடையே தேசம், தேசியம், தேசத்துக்காக உயிர் நீத்த புதல்வர்கள் பற்றிய அறிவை, தெளிவை ஊட்டுமுகமாகவே தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியாவில் நடாத்துகின்ற தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தால் இப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

பிராந்திய ரீதியாக முதல் கட்டப் போட்டிகள் நடாத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்க ளுக்கிடையிலான இறுதிப் போட்டிகள் தேசிய ரீதியில் நடாத்தப்படும். போட்டிகள் சம்பந்தமான அனைத்து விபரங்களையும் விண்ணப்பப் படிவங்களையும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் இணையத் தளமான www.tnrf.co.uk இல் பெற்றுக் கொள்ளலாம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.