சொந்த செலவிலேயே எம்பிக்கள் இலங்கை சென்றிருக்கிறார்கள்: கருணாநிதி

karunanidhi-tpandianதிமுக அணி எம்.பி.க்கள் குழு தங்களது ஐந்து நாள் இலங்கை பயணத்தை சனிக்கிழமை தொடங்கினர்.குழுவினர் அரசின் சார்பில் அனுப்பப்படவில்லை’ என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை.

’’நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அனுப்ப வேண்டுமென்று காங்கிரஸ், திமுக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கை சென்று நிலைமைகளை அறிந்து வர மத்திய அரசின் வெளியுறவுத் துறை அனுமதி அளித்துள்ளது.

இது அரசாங்கத்தின் சார்பில், அரசு செலவிலே அனுப்பப்பட்ட குழு அல்ல. அரசு சார்பில் குழு அனுப்பும் போதுதான் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், துறையின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும்.

இப்போது செல்லும் குழுவிலே உள்ள உறுப்பினர்களுக்கான விமானக் கட்டணம் போன்ற செலவுகளைக் கூட அந்தந்த கட்சிகள் தான் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், எது நடந்தாலும், குறை காண்பது சிலரது வழக்கம்’’ என்று கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.