இரண்டு யாழ் பல்கலைக்கழக மாணவிகள் இலங்கை இனவாதப் படைகளால் கடத்தப் பட்டுள்ளார்கள்

Jaffna+Universityகைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் 20 திகதி வவுனியாவிலரந்து இந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் 57 மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடந்தமாதம் 28ஆம் தகதி விடுவிக்கப்பட்டனர்.
 
அதன் பின்னர் இரண்டு தொகுதி மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப்படாது இருந்தனர்.
 
இன்றைய தினம் 47 மாணவர்கள் உட்பட முடும்பத்தினருடன் 57போ விடுவிக்கப்பட்டபோது இன்று காலையில் குறித்த மாணவிகள் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டள்ளனர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் என்ன நடந்தது என்பது பற்றியும் எந்த தகவலும் தெரியவரவில்லை என யாழ்ப்பாணத்தில் இருந்து  கூறப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.