முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் இலங்கை அரசு – “சன்டே லீடர்”

morning_leaderபெரும் நிதிநெருக்கடியில் சிக்குண்டு தவிக்கும் இலங்கை அரசாங்கம் வன்னிமக்களை பராமரிப்பதற்காக என்று கூறி வெளிநாடுகளிடம் பிச்சசைஎடுத்து வருவதாக இலங்கையில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில வார ஏடான “சன்டே லீடர்” விமர்சித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்து பிச்சை எடுப்பதற்காக  தெடர்ந்து 2இலட்சத்து 50ஆயிர தமிழ் மக்களை முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும் அது குற்றம்சுமத்தியுள்ளது.

ஏற்கனவே 225மில்லியன் வழங்கியபோதும் இதுபோது அனைத்துலக நாடுளிடம் புதிய கோரிக்கைகளையும் விடுத்துவருகின்றது.

இடம்பெயந்தவர்கள் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என வலியுறுத்தி நிதி வளங்கல் மையமான பிரித்தானியா அனைத்து நிதி உதவியையும் நிறுத்திவிடப்போவதாக அண்மையில் எச்சரித்துள்ளதுடன் அரசு நடந்துகொள்ளும்விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசினால் துக்கிஎறியப்படவில்லை. அரசை அச்சம் அடையச்செய்யும் கருத்துக்கள் என்றுகூறப்பட்டுள்ளது என தகவல் அறிந்த வட்டாரம்கள் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.