தமிழகத் தலைவர்களின் பதில்களே தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட முடியும்

manoganesan21_thumb2தமிழ் மக்களின் மீதான பாரிய மனித உரிமை மீறல்களுக்கு தமிழகத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தரக்கூடிய பொறுப்புள்ள பதில்களே இலங்கையில் தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகாட்ட முடியும் என தமிழ் மக்களாகிய நாம் நம்புகிறோம்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டதையும், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் தூதுக் குழுவினராக இலங்கைக்கு வருகை தந்ததையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால் இங்கு வருகை தரும் தமிழக அரசியல் தலைவர்களிடம் நற்சான்றிதழ் பெறுவதற்காக தமது ஆட்சியின் அலங்கோலங்களை மறைத்து புதிய காட்சிகளை அரங்கேற்றி காட்டுவதற்காக கடந்த ஒரு வாரகாலமாகவே இலங்கை அரசாங்கம் பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பதை தமிழக தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.

என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மனித உரிமைகள் தொடர்பிலான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.