கனடா மொன்றியலில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சிநாள்

cama52ம் லெப்டினட் மாலதி அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகவும் மூத்ததளபதிகள் லெப்டினன்ட் கேணல் குமரப்பா, லெப்டினன்ட் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 22ம் ஆண்டு நினைவாகவும் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவிகளின் மூன்றாம் ஆண்டு நினைவாகவும் இன்றையதினம் கனடாவின் கியுபெக் மாநிலத்தின் மொன்றியல் மாநகரில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்  நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

நேற்று 10.10.2009 சனிக்கிழமை மாலை 7:00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்கள் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடர்களை ஏற்றி மலர்மாலைகளை அணிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர்வணக்கமும் அகவணக்கமும் இடம் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற எழுச்சி நிகழ்வில் சிறப்புரைகளும் கவிதை நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்நிகழ்வில் அதிகளவான மொன்றியல் வாழ் தமிமீழ உறவுகள் கலந்து கொண்டு தங்கள் உறவுகளுக்கு வணக்கம் செலுத்தினர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.