பிரான்சில் நடைபெற்ற 2ம்லெப் மாலதியின் 22வது ஆண்டு நினைவு நாளும், கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்

malathi2பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வானது 10.10.2009 சனிக்கிழமை மாலை 15.30மணிக்கு பிரான்சு மனிதவுரிமைச்சதுக்கம் பகுதியில் ஆரம்பமானது.

தாய் மண்ணுக்காக சமராடி வீரப்பெண்ணாக வீராவியம் அடைந்த தமிழீழத்தின் முதல் வீராங்கனையான 2ம்லெப் மாலதியின் 22ம் ஆண்டு நினைவு நாளும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும் பிரான்சில் நடைபெற்றது.

நிகழ்வில் ஈகைச்சுடரேற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. மாலதியின் வீரத்தையும், தியாகத்தையும், தமிழீழப்பெண்களின் தலை நிமிர்வையும் நெஞ்சில் தாங்கியபடி கூடியிருந்த மக்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.

முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியமர்த்துமாறு சர்வதேச சமுதாயத்திடம் வலியுறுத்திய துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டன. மாலை 18.00மணிக்கு நிகழ்வு நிறைவு பெற்றது.

மேலும் பிரான்சில் எதிர் வரும் 17.10.2009 பிரான்சு இளையோர் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் சுதந்திர தாகம் எனும் பேரெழுர்ச்சி ஒன்றுகூடலும்,பேரணியும் நடைபெறவிருக்கிறது எனவே அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.