தெற்கின் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் சரிவைக் காட்டுகிறது

Tissaaththanayakeதெற்கின் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தெற்கிலே அரசாங்கத்தின் பலம் சரிவடைய ஆரம்பித்துள்ளதாகவும் தெற்கு மக்கள் தேர்தலை புறக்கனித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுமார் 8 இலட்சத்து 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பினால் இந்த மாகாணசபை தேர்தல்களின் போது 8 இலட்சம் வாக்குகளையே பெறமுடிந்துள்ளதாகவும், இதன் மூலம் அரசாங்கத்தின் பலம் தெற்கில் சரிய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த தேர்தலின் போது மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் தேர்தலை புறக்கனித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
 
அத்துடன் தெற்கு மக்கள், ராஜபக்ஷ குடும்ப நிர்வாகத்தினை நிராகரித்துள்ளதுடன், அனைத்து தேர்தல் செயற்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து மும்முரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த  ஜனாதிபதிக்கு தெற்கு மக்கள் சரியான பதிலை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
அத்துடன் இந்த தேர்தலில் 85‐90 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெரும் என மார்தட்டிய அரசாங்கத்தினால், இலட்சக்கணக்கில் துறைமுக அனுமதிகள் வழங்கப்பட்டு, இலட்சக்கணக்கில் நிவராணங்கள் வழங்கப்பட்டு, இலட்சக்கணக்கில் நில உரிமைகள் வழங்கப்பட்டு, அரசாங்கத்தின் முழுமையான வளங்களும் பயணபடுத்தப்பட்டும் 67 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறமுடிந்துள்ளதாக அவர் கூறினார்.
 
இந்த நாட்டில் கடந்த மே மாதம் தொடக்கம் 6 தடவைகளில் பகுதி பகுதியாக நடத்தப்பட்ட மாகாணசபை தேர்தல்களினால் சுமார் 1300 மில்லியன் ரூபா மக்களின் பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இனிமேல் பகுதி பகுதியாக தேர்தல் நடத்துவதற்கு முடியாதபடியால் பொது தேர்தலுக்கு செல்லவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
 
அரசாங்கத்திற்கு நம்பிக்கையிருந்தால், பொது தேர்தலை நடத்துமாறு அவர் சவால் விடுத்ததுடன், மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டடிய கட்டாயத்தில் அரசாங்கம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
 
எதிர்வரும் 3, 4 மாதகாலத்திற்கு பொது தேர்தலொன்றை நடத்தி முடிக்கவேண்டியுள்ளதுடன் அடுத்த வருடம் புதிய அரசொன்றை அமைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
தென்மாகாணசபை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
 
அக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.