கச்சதீவுக் கடலில் மீண்டும் சிறீலங்கா கடற்படை வெறியாட்டம்!

SLNavyகச்சதீவுக் கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல்களை சிறீலங்கா கடற்படை நிகழ்த்தியுள்ளது.

சனிக்கிழமை கச்சதீவை அண்டிய கடலில் நானூறு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளர்களை ஐந்து வேகப் படகுகள் சகிதம் சூழ்ந்து கொண்ட சிறீலங்கா கடற்படையினர், அவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.

இதன்பின்னர் தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் சிலவற்றை ஆக்கிரமித்த சிறீலங்கா கடற்படையினர், அவற்றிலிருந்த பூகோள திசைகாட்டிக் கருவிகள், பனிக்கட்டிப் பெட்டிகள், எரிபொருள் கொள்கலன்கள் போன்றவற்றை கடலில் வீசியெறிந்ததோடு, வலைகளை அறுத்தெறிந்து மீன்பிடிகளை நாசம்செய்துள்ளனர்.

இதனால் இராமேசுவரம் கடலோரப் பகுதியில் பெரும் பதற்றம் மேலோங்கியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.