வன்னியில் சிங்களவர்களும் குடியமர்த்தப்படுவர்: பசில்ராஜபக்சே

SRILANKA/இலங்கை அதிபரின் ஆலோசகரும் சிறப்பு பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைவருமான பசில் ராஜபட்சே,  இலங்கை வன்னியில் தமிழர்களுடன் சிங்களர்களும் குடியமர்த்தப்படுவர் என தெரிவித்திருப்பதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்சே மேலும்,  முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கே இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறியவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் மட்டுமே மறு குடியேற்றம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதாகவும், இதில் இன மற்றும் மத அடிப்படையிலான வேறுபாடுகளைப் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.