பிரபாகரன் ஆவி கூட அதிகாரம் செலுத்த முடியாதா? ராஜபக்சேவுக்கு வைகோ கண்டனம்

vaiko_nerudalவன்னி வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். அப்போது,  ‘’ஈழத் தமிழர்கள் தணலாக உள்ளனர். அவர்களுடைய எரிமலை குமுறலை அணைக்க முடியாது.

பிரபாகரன் ஆவி கூட அதிகாரம் செலுத்த முடியாது என்று திமிராக ராஜபக்சே பேசுகிறார். முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

தமிழ் ஈழம் ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும். பிரபாகரன் அழியவில்லை. உரிய நேரத்தில் வருவார். பிரபாகரன் தலைமையில் போராடுவார்கள். தமிழீழம் மலர வேண்டும். தமிழீழத்தை தொடர்ந்து ஆதரிப்போம்’’என்று பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.