எதிர்கால தேர்தல்களின் போது அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்நோக்கும்

tilvin_silvaஎதிர்கால தேர்தல்களின் போது அரசாங்கம் பாரிய சாவல்களை எதிர்நோக்கும் என ஜே.வி.பி கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
 
தென் மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் எதிர்கால அரசியலில் ஓர் திருப்பு முனையாக அமையும் என அவர் ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பீடு செய்யும் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை 25491 வாக்குகள் குறைவாகவே பெற்றுக் கொண்டுள்ளது.
 
ஜனாதிபதியின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் இம்முறை குறைவான வாக்குகளே அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பீடு செய்யும் போது 9995 வாக்குகள் குறைவாகவே அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.
 
தேர்தல் காலத்தில் ஜே.வி.பி. மீது பல்வேறு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஊவா மாகாணசபைத் தேர்தல்களின் போது அரசாங்கம் 70 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகவும், தென் மாகாணசபைத் தேர்தல்களின் போது இது 67 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல்களில் வெற்றியீட்டுவதற்காக அரசாங்கம் கடுமையான அதிகார துஸ்பிரயோகத்தை கட்டவிழ்த்துவிட்டதாக ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
 
எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக சிறுபான்மை மக்கள் அரசாங்கத்தை நிராகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.