எங்கள் கடமைகள் இன்னும் முடியவில்லை – இராணுவத் தளபதி

Sri Lanka Armyயுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தாய் நாடு தொடர்பான இலங்கை இராணுவத்தின் பொறுப்புகள் முடிந்துவிடவில்லை என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பெறப்பட்ட சுதந்திரத்தை உயிரை கொடுத்து பாதுகாக்க இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். போரின் மூலம் கைப்பற்றப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தேவையான அபிவிருத்தி பணிகளுக்கு உதவுவது படையினரின் முதன்மையான பொறுப்பாகும்.
 
இந்த பொறுப்பை நிறைவேற்றுவதும், முழு இலங்கை மக்களும்
சமாதானம் மற்றும் அச்சமின்றி தமது வாழ்க்கை கொண்டு செல்லும் வகையிலான சூழலை கட்டியெழுப்புவது இராணுவத்தினரின் கடமை எனவுதம் ஜகத் ஜயசூரிய மேலும் கூறியுள்ளார்.

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே இராணுவத் தளபதி இந்தகருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.