வவுனியா இடம்பெயர்மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்

வவுனியா இடம்பெயர்  முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தாம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கும், இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
 
அநேகமான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள திரும்ப வேண்டும் என்பதனையே முதன்மை கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
 
முகாம்களில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு முகாம் வாழ்க்கையை முடிவுறுத்துவதேயாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.