கோட்சேயின் விருந்தில் காந்தியின் சீடர்கள் ‐ வைகோ

vaiko4நெல்லையில்  நேற்று செய்தியாளர்களிடையே பேசிய வைகோ மிகக் கடுமையான வார்த்தைகளால் தமிழக காங்கிரஸ், திமுக எம்பிக்களின் இலங்கை விஜயத்தை விமர்சித்துள்ளார்.
 
இலங்கை அதிபர் ராஜபக்ஸ தமிழக எம்பிக்கள் குழு சந்திப்பது அவமானம். கோட்சே வைக்கும் விருந்துக்கு காந்தியின் சீடர்களைக் கூப்பிடுவது போல இது என்று வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஐந்தரை மாதங்களாக மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைபட்டு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.
 
இவர்களை சந்திப்பதற்கு அதிபர் ராஜபக்ச தமிழக எம்பிக்கள் குழுவை அழைத்துள்ளார். தமிழினத்தை கொலை செய்த அவரை தமிழக எம்பிக்கள் சந்திப்பது அவமானம். இதற்கு திமுக உறுதுணையாக இருந்தது. யுத்தத்தை தடுக்க வேண்டியவர்கள் அப்போது கபட நாடகம் ஆடினர். இலங்கையில் தமிழக எம்பிக்கள் குழு செல்வது ஒரு கண்துடைப்பு நாடகம். ராஜபக்ச தமிழக எம்பிக்களை அழைப்பது காந்தியின் சீடர்களை கோட்சே விருந்துக்கு அழைப்பது போல் உள்ளது என வைகோ கண்டித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.