எம் மக்களை அடைத்து வைத்திருப்பதர்க்காக இலங்கைக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் தமிழக குழு

show_image_NpAdvSinglePhotoஐந்து நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று யாழ்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களையும் பொது மக்களையும் சந்தித்துப் பேசினார்கள்.
 
வவுனியா மனிக்பாம் முகாமையும் சுற்றிப் பார்த்தனர். இது வரைக் இக்குழுவினர் வெளிப்படையான சுதந்திரமான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க்வில்லை.

பல்வேறு சர்ச்சைகளை அவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் சந்தித்து வருகின்ற நிலையில், மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை இக்குழுவினர் பாராட்டியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்திலிருந்து வந்துள்ள பத்து பேர் கொண்ட குழுவினர் வவுனியாவில் உள்ல நலன்புரி மையங்களுக்கு விஜயம் செய்தனர். அதிபர் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.
 
இந்தக் குழுவின் பிரதிநிதிகள், நலன்புரி மையங்களில் உள்ளோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாராட்டினர். மேலும் இந்த மையங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
 
தங்களது ஐந்து நாள் பயணத்தின்போது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களையும் இந்தக் குழுவினர் பார்வையிடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே தமிழக குழுவினரின் விஜயம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் ராஜபக்ச மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக குழுவினரின் வருகை அமைந்துள்ளது.
 
இலங்கை அரசின் உள்ளூர் மற்றும் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக உள்ளதை சர்வதேச சமுதாயம் பாராட்டி வருகிறது. எனவே, சர்வதேச ராணுவ கோர்ட்டிலோ அல்லது விசாரணைக் குழு முன்போ இலங்கைத் தலைவர்களை நிறுத்துவதோ அல்லது போர் ஹீரோக்களை நிறுத்துவதோ இயலாத காரியமாகும்.
 
இதுதொடர்பான எந்த சட்ட ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடவில்லை. 2002ம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்தது. ஆனால் அப்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அதில் கையெழுத்திட மறுத்து விட்டார். ஆனால் அப்படி ஒன்று நடந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை சர்வதேச சமுதாயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.
 
ஆனால் ரனில் விக்கிரமசிங்க இப்போது கூறுகையில், ராணுவக் கோர்ட் முன்பு இலங்கைத் தலைவர்களை நிறுத்த வேண்டும் என்கிறார். இப்படிக் கூறியுள்ளதன் மூலம், நமது வீரர்களை அவர் அவமதித்து விட்டார். கடந்த எட்டு தேர்தல்களில் அதிபர் ராஜபக்ச தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் போகும் பாதை சரியானதே என்பது நிரூபணமாகியுளளது. அவரது நடவடிக்கைளை மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். இது தென் மாகாணத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது என்றும்; பொகல்லகாமா தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.