தமிழக எம்.பி.க்கள் இலங்கை வருகை: ராஜபக்சே மீதான இந்தியாவின் நம்பிக்கை

rokitha1ராஜபக்சே மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக குழுவினரின் வருகை அமைந்துள்ளது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகமா கூறியுள்ளார்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களைப் பற்றி நேரில் பார்வையிட ஐந்து நாள் பயணமாக கொழும்பு சென்றனர்.

இந்நிலையில் தமிழக எம்பிக்கள் குழுவினரின் வருகை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா,

அதிபர் ராஜபக்சே மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக குழுவினரின் வருகை அமைந்துள்ளது.

‘இலங்கை அரசின் உள்ளூர் மற்றும் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக உள்ளதை சர்வதேச சமுதாயம் பாராட்டி வருகிறது.

எனவே, சர்வதேச ராணுவ கோர்ட்டிலோ அல்லது விசாரணைக் குழு முன்போ இலங்கைத் தலைவர்களை நிறுத்துவதோ அல்லது போர் ஹீரோக்களை நிறுத்துவதோ இயலாத காரியமாகும்.

இதுதொடர்பான எந்த சட்ட ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடவில்லை. 2002ம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்தது. ஆனால் அப்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அதில் கையெழுத்திட மறுத்து விட்டார்.

ஆனால் அப்படி ஒன்று நடந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை சர்வதேச சமுதாயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.

ஆனால் ரனில் விக்கிரமசிங்கே இப்போது கூறுகையில், ராணுவக் கோர்ட் முன்பு இலங்கைத் தலைவர்களை நிறுத்த வேண்டும் என்கிறார். இப்படிக் கூறியுள்ளதன் மூலம்இ நமது வீரர்களை அவர் அவமதித்து விட்டார்.

கடந்த எட்டு தேர்தல்களில் அதிபர் ராஜபக்சே தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் போகும் பாதை சரியானதே என்பது நிரூபணமாகியுளளது. அவரது நடவடிக்கைளை மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். இது தென் மாகாணத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.