ஊடகங்களுக்கு கருத்து வெளியிட இந்திய குழுவுக்கு தடை!

handstopதமது வவுனியா விஜயம் தொடர்பிலான உண்மை நிலவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட கூடாது என நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

வவுனியா முகாமில் உள்ள மக்கள், தமது விஜயத்தின் போது கண்ணீருடன் கதறி அழுது, தம்மை விடுவிக்க வேண்டும் என கோரியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவல்களை வெளியிட்டால், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிப்படையும் என தெரிவித்து, கருத்து வெளியிட தமது குழுவால் தடைவிதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கருத்தில் கொண்டு, மக்களின் உண்மை நிலைகளை வெளிப்படுத்தாதிருப்பது தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.