தாயக மக்களை காப்பாற்றுமாறு கோரி தமிழ்நாட்டில் அகதி ஒருவர் தீக்குளித்து மரணம்

kogul_20090225தாயகத்தில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வாழ்ந்த இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்து தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

இவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உருக்கமாக ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்தார்.

அதன்பின் பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை அமரேசன், சிவப்பிரகாசம் உட்பட தமிழகம் முழுவதும் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சிவகாசி அருகே வாழ்ந்து வந்த இலங்கை தமிழ் அகதி ஒருவரும் தீக்குளித்துத் தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரான பாலசுப்பிரமணியம் கோகுலரத்தினம் (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்றுள்ளார்.

பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்று அரசு சார்பில் சிவகாசி அடுத்த ஆனையூர் காந்திநகரில் உள்ள ‘சிலோன்’ குடியிருப்பில் வழங்கப்பட்ட 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார்.

அங்கு, சிவகாசி ‘காளீஸ்வரி’ பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
kogul_20090225002kogul_20090225001

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.