ராஜபக்சேவுக்குக் கூட நோபல் தரலாம் – கனடா நாளிதழ்

laughing-guy-thumb168075அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அதற்குப் பேசாமல், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தப் பரிசைக் கொடுத்திருக்கலாம். அவர் இதற்குப் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார் கனடாவைச் சேர்ந்த ஜோனத்தான் கே என்பவர்.

இதுகுறித்து கனடாவின் நேஷனல் போஸ்ட் செய்தித் தாளில் எழுதியுள்ள கட்டுரை.

இப்போதைக்கு நோபல் அமைதிப் பரிசுக்கு முழுப் பொருத்தமான ஒரே நாடு இலங்கை மட்டுமே. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அதிபர் ராஜபக்சே மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு போய் ஓய்ந்துள்ளது. எனவே அவருக்கே இந்தப் பரிசைக் கொடுத்திருக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இலங்கைப் போரால், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் ராஜபக்சே மிகவும் உறுதியாக இருந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைமையே இல்லாமல் செய்து விட்டார்.

ஒரு வலிமை வாய்ந்த கொரில்லா அமைப்பை நவீன போர் முறைகளால் அழித்திருப்பது வரலாற்றில் மிகவும் அரிதான விஷயமாகும்.

ஒரே நாள் இரவில் போர் என்பது இலங்கைக்கு வினோதமான விஷயமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் கே.

ஆனால் ஒரே நாளில் 3 லட்சம் பேர் அகதிகளாக திறந்த வெளி முகாம்களில், துப்பாக்கி முனையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தோ அல்லது அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு அவலமான நிலையில் இருப்பது குறித்தோ கே ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.