அரசுக்கு எதிரான கூட்டணியில் 24 அமைச்சர்கள்

tn_laxmanஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியால் கடும் அதிருப்தியுற்ற அமைச்சர் கள் 24 பேர் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்படவுள்ள பொதுக்கூட்டமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி நேற்றுத் தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த அமைச்சர்களுடன் பேச்சுகள் நடத்தப்படுகின்றன என்றும் விரை வில் அவர்கள்  கூட்டமைப்புடன் இணைந்துகொள்வர் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்தது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் எம்.பி. பாலித ரங்கே பண் டாரவே இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளுடன் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது. அரசு எதிர்பார்த்த வெற்றியை அத்தேர்தலில் பெறவில்லை.

அரசு, யுத்த வெற்றியைத் தெற்கில்தான் அதிகம் விற்றது. அதனூடாகவே அரசியல் செய்தது. 90 வீத வெற்றியை இத்தேர்தலில் அரசு எதிர்பார்த்தது. ஆனால், தென் மாகாண மக்களிடம் அது எடுபடவில்லை.

ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியால் மக்கள் அதிருப்தியுற்றுள்ளனர். மஹிந்தவின் குடும்பத்தைத் தவிர, இந்நாட்டு மக்கள் எவரும் நன்மையடைந்ததில்லை.

மக்கள் அனுபவிக்கவேண்டிய அனைத்துச் சலுகைகளையும் ராஜபக்ஷவின் குடும்பத்தினர்தான் அனுபவிக்கின்றனர். இதனால், இம்மக்கள் இந்த ஆட்சியை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.மக்கள் மாத்திரமன்றி அமைச்சர்களும் அந்தக் குடும்ப ஆட்சியால் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவர்கள் எம்மால் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்டமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பேச்சுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சுமார் 24 அமைச்சர்கள் எமது கூட்டமைப்புடன் இணைவர்.   அதனைத் தொடர்ந்து மேலும் பல அமைச்சர்களும் எம்முடன் இணைவர்.

உண்மையில் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுடன் இந்த அரசின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இந்நாட்டு மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயம் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பி உண்மையான ஜனநாயக ஆட்சியொன்றை அமைப்பர்.என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.