முகாம்களில் உள்ள 22,000 புலிகளும் அழிக்கப்படுவார்கள்!

palitha-kohana-outமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான வன்னி மக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் என இனம்காணப்படுவோர் அழிக்கப்படுவார்கள் அல்லது அகற்றப்படுவார்கள் என்று சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்கா தூதுவர் பாலித்த கோஹொன்ன, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 12,500 பேர் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக அடையாளப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை விட மேலும் 10,000 புலிகள் முகாம்களில் இருக்கக்கூடும் என்றும், இவர்களை அடையாளம் கண்டு அழிப்பது அல்லது மக்களிடம் இருந்து அகற்றுவதே தங்களின் நோக்கம் என்றும், 27 ஆண்டுகளாக தமது நாட்டை ஆட்டிப் படைத்த பயங்கரவாதம் என்ற நரகம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என்றும் பாலித்த கோஹொன்ன தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.