ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கலைஞர் ஓங்கி குரல் கொடுத்தால் கரம் கோர்க்க தயார்: ராமதாஸ்

ramadas200_4_1பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நமக்குள் மோதல் வேண்டாம். எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று முதல்வர் கூறுவது உண்மையானால், தமிழினத்தின் அவமான சின்னமாக விளங்கும் முள்வேலி முகாம்கள் உடனடியாக உடைத்தெறியப்பட வேண்டும். அதற்கு இந்திய அரசு, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போரின் போது, அடிக்கடி கொழும்பு சென்றுவந்த இந்தியத் தூதுவர்கள் உடனடியாக கொழும்புக்கு புறப்பட்டுச் சென்று, அங்கேயே முகாமிட்டு முள்வேலி முகாம்களை அகற்றி 3 லட்சம் தமிழர்களை விடுதலை செய்து திரும்பி வர வேண்டும் என்று முதல் அமைச்சர் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கை சென்ற குழுவில் எங்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற கோபத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு முதல் அமைச்சரோடு இதில், கரம் கோர்த்து செயல்படவும், அவரோடு ஓங்கிக் குரல் கொடுக்க நாங்கள் தயார் என்று கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.