கொட்டும் மழையில் பிரித்தானியாவில் ஆறாவது வாரமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

IMG_0382சிறீலங்க அரசாங்கத்தினால் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் பல அன்றாட தேவைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவர்களுக்கான குடிநீர் வசதிகள் மட்டுபடுத்த நிலையில் அந்த அப்பாவி தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று ஆறாவது வெள்ளிக்கிழமையாக நூற்றுக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்தின் முன்றலில் முன்னெடுத்தனர்.

கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தில் பல சிறுவர்கள் உட்பட வயோதிபர்கள் வரை பல்பாலினத்தினரும் கலந்துகொண்டு எமது மக்களை விடுவிக்க கோரி கோசமிட்டனர். அத்துடன் அவர்களை இந்த நிலைக்கு உருவாக்கிய சிங்கள சிறீலங்க அரசாங்கத்தின் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பினர்.

300, 000 தமிழ் மக்களும் சொந்த இடங்களில் குடியேற்றப்படும் வரை தொடரவிருக்கும் இந்த போராட்டம் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 7 மணிவரை முன்னெடுக்கப்படும் என அறியத்தந்துள்ளனர் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையினர்.

அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் சுழற்சி முறையில் இணைந்துகொண்டு அந்த அப்பாவி பொது மக்களுக்காக குரல் கொடுப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.