கனடா, ரொரொன்ரோ மாநகரில் தொடர் போராட்டத்தின் 7வது வாரமாக இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

rajah2009 612 []கனேடியத் தமிழர் சமூகமும் கனேடிய மாணவர் சமுதாயமும் இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் கனடா, ரொரொன்ரோ மாநகரில் அமைந்திருக்கும் இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால் ஒக்டோபர் 9ம் திகதி, மாலையன்று நடைபெற்றது.

இத்தொடர் போராட்டமானது கனேடிய தமிழர் சமுதாயகமும், கனேடிய மாணவர் சமூகமும் இணைந்து தொடர் போராட்டத்தின் அடுத்தகட்டமாக 7வது வாரமாக மாணவர் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

– 140 நாட்களுக்கு மேலாக வதைமுகாம்களுக்குள் அடைபட்டு இன்னல் பட்டுக்கொண்டிருக்கும் 3 லட்சம் உடன்பிறவா தமிழ் உறவுகளை காக்க வேண்டியும்

– படுபாதக இலங்கை அரசுடன் இணைந்து ஈழத்தமிழரின் வாழ்வியல் சிதைவுக்கு காரணமாக இருந்தது மட்டுமல்லாது, இலங்கையரசின் போர்க்குற்றங்களை மறைக்க தொடர் உதவிபுரிந்து வரும் இந்திய அரசை, இலங்கை இராணுவத்திற்கான உதவிகளை நிறுத்தக் கோரியும்

– யாழின் செம்மணிபோன்று வதைமுகாம்களில் நாழாந்தம் காணாமற்போகும் எமது உறவுகளைக் காக்குமாறும், அதேநேரத்தில் போதிய மருத்துவ உதவிகள் மற்றும் போஷாக்கின்மையால் இறக்கும் சிறார்களையும் முதியவர்களையும் காக்க வேண்டியும், சர்வதேச சமூகம் அவர்களை அவர்களுது வீடுகளுக்கு மீழ அனுப்பவேண்டும்

என்ற கோரிக்கைகளை வைத்து இந்தியத் துணைத்தூதராலயத்தின் முன்னால் திரண்ட ரொரொன்ரோ வாழ் தமிழரும் மாணவ சமூகமும் கொட்டும் மழையின் மத்தியிலும் ‘எமக்காக நாமே! எமது எழுச்சியே எமது மக்களின் மருந்தாகும்’ எனக் கட்டியம் கூறும்வாறு இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தின் போது, எம மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும் வரை களங்கள் விரியும், போராட்டங்கள் தொடரும் என மாணவர்கள் உறுதியெடுத்துக்கொண்டர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.