கனடாவில் நடைபெற்ற தமிழீழச் சுற்றுக்கிண்ணம் – துடுப்பாட்டம் 2009

10619_173173190438_512400438_3711617_5539078_nகனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை பிரிவும் ரொறன்ரோ துடுப்பாட்ட அமைப்பும் இணைந்து நடத்திய தமிழீழத் துடுப்பாட்டச் சுற்றுக் கிண்ணம் – 2009 ஓக்டோபர் மாதம் 3 ஆம், 4 ஆம் மற்றும் 11 ஆம் நாட்களில் அல்பேர்ட் காம்பெல் விளையாட்டரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இச்சுற்றுகிண்ணத்தில் 500 விளையாட்டு வீரரைக் கொண்ட 31 அணிகள் பங்குபற்றினர்.

முதல் முறையாக நடைபெற்ற இத்தமிழீழத் துடுப்பாட்டச் சுற்றுக்கிண்ணம் வெற்றிகரமாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய தமிழ்ச் சமூகத்திற்கும் விளையாட்டுவீரருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

எமது இளந்தலைமுறையினரிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த தமிழீழச் சுற்றுக்கிண்ணம் ஒரு வாய்ப்பை வழங்கியது. இறுதி சுற்றில், 101 துடுப்பாட்ட அணியும் ரொக்கட் துடுப்பாட்ட அணியும் மோதின. கடுமையான மோதலைத் தொடர்ந்து தமிழீழ வெற்றிக் கிண்ணத்தை 101 துடுப்பாட்ட அணி தட்டிச் சென்றது.
தமிழீழத் தேசிய அடையாளங்களின் பெயர்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தமிழீழத்தின் தேசிய மரமாகிய வாகையின் பெயரில் சிறப்பாக துடுப்பெடுத்து ஆடிய ரொக்கட் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த ஜெராட் அன்ரனிக்கு விருது வழங்கப்பட்டது. தமிழீழத்தின் தேசிய விலங்காகிய சிறுத்தையின் பெயரில் சிறந்த ரவுண்டருக்கான விருது 101 துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த கமல் விக்டர்க்கு வழங்கப்பட்டது. தமிழீழ தேசியப் பறவையாகிய செண்பகத்தின் பெயரில் ரொக்கட் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அரவிந்தன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலதிக விருதுகள்: அரைஇறுதி சுற்று 1: கமல் விக்டர் (101 துடுப்பாட்ட அணி) – சிறந்த துடுப்பாட்;டு வீரன் அரைஇறுதி சுற்று 2: ஜெராட் அன்ரனி (ரொக்கட் துடுப்பாட்ட அணி) – சிறந்த துடுப்பாட்;டு வீரன் இறுதி சுற்று: ஜெயன் இராஜேந்திரம் (101 துடுப்பாட்ட அணி) – சிறந்த துடுப்பாட்;டு வீரன்
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழீழக் காற்பந்து சுற்றுக் கிண்ணத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வுகளுக்கு எம்மக்களிடம் கிடைத்த ஆதரவு, தொடர்ந்தும் எம் இளையோரிடம் இருக்கும் மேலதிக திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்வுகளை நடத்த ஏதுவாக அமையும்.

கனடிய தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை பிரிவு கனடாவாழ் தமிழ் இiளாயோரின் தலைமைத்துவ பண்புகளை விளையாட்டு மூலம் வெளிக்கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.