சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்

conf0504_vithy_68262_200உதயன் மற்றும் சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.  கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்.

பிந்திக் கிடைத்த செய்தி

தமிழீழ விடுதலைப்புலிகள் அண்மையில் கொழும்பில் நடத்திய விமானத் தாக்குதலுட்ன சுடர்ஒளி செய்தித்தாளின் பிரதம செய்தியாசிரியர் என். வித்தியாதரனுக்கு தொடர்புள்ளதாக கிடைத்தத் தகவலை அடுத்தே அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொள்வதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இன்று முற்பகல் கல்கிசையில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட வித்தியாதரன் பின்னர் தெமட்டகொடையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவிவித்தார்.

இந்தநிலையிலேயே பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதலுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நாள் சுடர்ஒளி, இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற செய்தியை மையமாகக் கொண்டே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.