இன்றைய சந்திப்பின் பொது மகிந்தவுக்கும் தமிழகக் குழுக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளது

nerudal-tamil-news1இந்திய நாடாளுமன்றக் குழுவினர்க்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான  சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றது.
 
இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத்தும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
 
இந்த சந்திப்பின் போது இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அகதி முகாம் மக்களின் நிலைமை குறித்து திருப்தி கொண்டுள்ளதாகவும் மிக விரைவில் அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் படி கேட்டுக் கொண்டதாகவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இடம்பெயாந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலுள்ள குடிநீர் பிரச்சினை, மலசலகூடப் பிரச்சினை உட்பட அங்கு காணப்பட்ட குறைப்பாடுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு வந்ததாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக இந்திய நாடாளுமன்றக் குழு கடுமையான தொனியில் ஜனாதிபதியிடம் உரையாடியதாகவும் அந்த வேளையில் தமது வேலை தமக்குத் தெரியும் என ஜனாதிபதி திமிர்க்கதை பேசியதாக இந்திய நாடாளுமன்றக் குழு கவலை அடைந்ததாகவும் தெரிய வருகிறது.
 
எனினும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள சில முகாம்களுக்கே அழைத்துச் செல்லப்பட்;டதாகவும், அவர்களுக்கு அங்குள்ள நிலைமை முற்றாக தெரிய வாய்ப்பில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தாங்கள் கேட்டுக்கொண்ட அனைத்துப் பகுதிகளுக்கும் இலங்கை அரசினர் தம்மை அழைத்துச் சென்றதாக இதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.