இலங்கை செய்திகள் சீ.என்.என்., பி.பி.சி., அல்ஜெசீரா ஆகியவற்றைத் துரத்துவேன்: கோதபாய

gothbaya036பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்க முயற்சிக்கும் தூதுவர்கள், செய்தி முகவர்கள் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை நாட்டைவிட்டுத் துரத்;தப் போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளுக்கு மூச்சு வழங்கி புத்துயிரளிப்பவர்கள் துரத்தப்படுவார்கள். பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த விலையைக் கொடுத்து மோதல்களில் வெற்றிபெற்றுள்ளனர்” என கோதபாய கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

ஜேர்மன், சுவிஸ் நாட்டு தூதுவர்கள் மற்றும் சில செய்தி முகவர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

சி.என்.என்., அல்ஜெசீரா மற்றும் குறிப்பாக பி.பி.சி. போன்ற செய்தி சேவைகள் விடுதலைப் புலிகளின் இணையத்தளங்களில் வெளியிடப்படும் வீடியோ காட்;சிகளை ஒளிபரப்பி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற பரபரப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக கோதபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

“அந்த வீடியோ காட்சிகள் குண்டு வெடிப்புக்களைக் காண்பிக்கவில்லை” என அவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்கு காணப்படும் அழுத்தங்களைக் குறைத்து, மோதல் பகுதிகளில் அகப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

“பொதுமக்களை பாதுகாப்புப் பிரதேசத்துக்குச் செல்ல மனுமதித்து மக்களுக்கு ஏற்படும் இழப்புக்களைக் குறைப்பதற்கு விடுதலைப் புலிகளுக்கு இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது” என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்களைப் பற்றிக் கதைக்காமல், விடுதலைப் புலிகளுக்கு உதவும் வகையில் கதைப்பது பொறுப்பற்ற நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அவர், பி.பிசி. செய்திச் சேவையின் செய்தியாளர் கிறிஸ் மொறிஸ் 1990ஆம் ஆண்டுகளிலிருந்தே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

“பொறுப்பான முறையில் நடந்துகொள்ளாமல், குழப்ப நிலையை ஏற்படுத்த அவர் முயற்சித்தால் அவரை நாட்டைவிட்டுத் துரத்;துவேன்” என அவர் கூறியுள்ளார்.

அதேபோல குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாட்டுத் தூதுவர்கள் உள்ளடங்கலான சர்வதேச சமூகத்துக்கும் இவ்வாறான நிலையே ஏற்படும் என கோதபாய ராஜபக்ஷ எச்சரித்தார்.

அனைத்து ஜனநாயக நாடுகள், அமைப்புக்கள் மற்றும் செய்தி முகவர் நிலையங்கள் பொறுப்பான முறையில் நடந்து, மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.