வவுனியாவில் கடும் மழை – 1500க்கு மேற்பட்டோர் முகாம்களுக்குள் இருக்க முடியாதவாறு பெரும் அவதி மக்களுக்கும் படையினருக்கும் இடையே முறுகல்

nerudal-tamil1வவுனியாவில் இன்று மாலையிலிருந்து கடும் மழை பொழிய  ஆரம்பித்துள்ளது. கடந்த ஓகஸ்ட்டில் பொழிந்தது போன்ற கடும் மழை இது என வவுனியாவிலிருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வவுனியாவின் முகாம்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

முகாம்களின் கூடாரங்கள் ஏற்கெனவே கடும் சேதத்திற்குள்ளானதால் 1500க்கு மேற்பட்டோர் முகாம்களுக்குள் இருக்க முடியாதவாறு பெரும் அவதியுற்றுள்ளனர்.
 
அவதியுறும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். இதன்காரணமாக வலயம் 6இன் இராணுவ அதிகாரிக்கும் மக்களுக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு நள்ளிரவு நேரமாகையால் மேலதிக தகவல்களை ஜீரீஎன்னால் பெற முடியவில்லை.

– GTN

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.