ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி

jeya-karunanithiஇடம் பெயர்ந்தோர் முகாம்களில் ஆய்வு என்ற பெயரில் ஒரு குழுவை அனுப்பியுள்ள முதல்வர் கருணாநிதி, இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் கேலிக்கூத்தாக்கி விட்டார், ஏமாற்ற நினைக்கிறார் என்று கடுமையாக கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மைனாரிட்டி திமுக அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட அரசியல்வாதிகளைக் கொண்டு இலங்கைக்கு குழுவை அனுப்பியுள்ளனர்.

இது அனைத்துக் கட்சி குழு அல்ல என்ற உண்மையை கருணாநிதியே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி ஒரு குழுவை அனுப்பும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதனால்தான் எதிர்க்கட்சிகளை இந்தக் குழுவில் சேருமாறு அவர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்தக் குழுவின் பயணத்திற்குப் பின்னர் கொடுக்கப் போகும் அறிக்கையை இப்போதே கூறி விடலம். குறிப்பிட்ட தமிழர் பகுதிகளுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவை, இலங்கை அரசின் அடக்குமுறைகள் குறைவாக உள்ளவையாகும்.

அவர்கள் திரும்பி வந்த பின்னர், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்துவதில் இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்கள் உள்ளன. எனவே தன்னால் முடிந்த நல்லதைச் செய்வதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்துள்ளார் என்று கூறப் போகிறார்கள்.

இதன் மூலம், ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஏமாற்றி விடலாம் என்று கருணாநிதி  நம்பிக் கொண்டிருக்கிறார். இப்படிச் செய்தால், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்கள்  சுய உரிமைகளைக் கோரி நடத்தி வந்த போராட்டம்  என்னவாகும்? சிங்களர்கள் மட்டுமே என்ற இலங்கை அரசின் கொள்கை என்னவாகும் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.