ஓமந்தையில் அமைக்கப்படும் சிறை சாலை யாருக்கு?

question-mark3aதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவுடைய திறந்த சிறைச்சாலையொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஓமந்தைப் பகுதியில் இந்த திறந்தவெளி சிறைச்சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புதிதாக அமைக்கப்பட்ட வவுனியா சிறைச்சாலை அங்குரார்ப்பண வைபவத்தின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
சுமார் 300 கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய வகையில் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
 
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர். டி. சில்வா சிறைச்சாலையை அங்குரார்ப்பணம் செய்தார்.
 
பிரதி நீதி அமைச்சர் வீ.புத்திரசிஹாமணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.