சரத் பொன்சேகா நாட்டை ஆளும் திறமை அற்றவர்

Vimal-NFFஜெனரல் சரத் பொன்சேகா யுத்தத்தில் வெற்றியீட்டியிருக்கலாம் எனினும் நாட்டை ஆட்சி செய்யக் கூடிய வல்லமை கிடையாது என ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.
 
எதிர்க்கட்சி கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பது தொடர்பான அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஜே.என்.பி. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார தஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமக்கு விரும்பிய சக்திகளை ஆட்சியில் அமர்த்தும் நோக்கில் சில வெளிநாட்டு சக்திகள் தற்போதைய ஆட்சியை கவிழ்க்க அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், எந்தவொரு சக்தியின் அழுத்தங்களையும் எதிர்நோக்கக் கூடிய ஆற்றல் ஆளும் கட்சிக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.