கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையானால் வன்னிக்குள் இராணுவம் பரவலாக்கப் பட்டது எப்படி?

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,   ‘’கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய பணிகள்தான் தமிழர்களை மீண்டும் அவர்களின் இடத்திற்கு குடியேற்றுவதற்கு தடையாக உள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.

ramadகண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையானால் வன்னிப்பகுதி நெடுகிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் எந்தவித சிக்கலும் இன்றி விரட்டிவந்தது எப்படி? பின்னர் அங்கிருந்து அகதி முகாம்களுக்கு விரட்டிச் சென்று அடைத்து வைப்பது எப்படி சாத்தியமானது?

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், போர் முடிந்து 6 மாதகாலமாக அகற்ற முடியவில்லையா? இலங்கைக்கு போரில் உதவிய நாடுகளிடம் ஏன் அதற்கான உதவிகளைக் கேட்கவில்லை? இந்தியாவிடம் ஏன் கேட்கவில்லை?

இந்திய அரசு நினைத்தால் ஒரேநாளில் கண்ணிவெடிகளை அகற்றி இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும். ஆனால் அதற்கான எண்ணமும், மனமும் இந்திய அரசிடம் இல்லை என்பதே உண்மை’’என்று தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.