முதல்வர் கருணாநிதி இலங்கை அரசின் கைப்பாவையா?

இலங்கை விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கை அதிபர் ராஜபட்சே கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

vijajaஇதன் மூலம் ராஜபட்சேவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபட்சேவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

4 மாதங்களில் 51 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் இனப்படுகொலை செய்த ராஜபட்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச போர் குற்றவாளியாக தன்னை விசாரித்து கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், தமிழகத்தில் இருந்து தூதுக்குழுவை அனுப்புமாறு முதல்வர் கருணாநிதிக்கு ராஜபட்சே கடிதம் எழுதியுள்ளார்.

தமிழத்தில் இருந்து வரும் தூதுக்குழு இலங்கை நிலவரத்தை பார்த்து திருப்தி தெரிவித்து விட்டால் மனிதகுல படுகொலையாளி என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து விடலாம் என்று ராஜபட்ச திட்டமிட்டுள்ளார்’’ என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.