58,000 பேர் மீள் குடியேற்றம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்கின்றார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர்

anura-piriyadarshana-yappaஇடம்பெயர்ந்து முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான வாரந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்தார். நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா, அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அவர்கள் கெளரவத்துடன் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.