பிரித்தானியாவின் கோரிக்கையும் இலங்கையால் நிராகரிப்பு

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை மூடி விடுமாறும், தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை பார்வையிட ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வாய்ப்பளிக்குமாறும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

david milibandஇலங்கையின் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை உடனடியாக விலகிக் கொள்ளப்பட வேண்டும் என மிலிபேண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பது இலங்கை அரசாங்கமே அன்றி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அல்ல.
 
அவருக்கு அவ்வாறான கோரிக்கைகளை விடுக்க உரிமையில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். டேவிட் மிலிபேண்ட் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கை விடுத்திருந்தார்.
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.