இடம்பெயர்ந்தோரை வன்னிப் பகுதியில் மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

இடம்பெயர்ந்தோரை வன்னிப் பகுதியில் மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
19 கிராமங்ளைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும், குறித்த பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

srilanka-governmentவன்னி, மாவட்ட அதிபர் பிரிவிற்கு உட்பட்ட 19 கிராமங்களிலேயே மக்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகவும் அடம்பன் பகுதியில் கடமையாற்றிய சகல கிராம உத்தியோகத்தர்களும் கடமைக்கு திரும்ப வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மீள் குடியேற்றல் நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவப் படையினர் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும் ஜனாதிபதி செயலணியின் பொறுப்பாளா ஜீவரட்ன தலைமையில் மன்னார் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.