மருந்துப் பொருள் மோசடிகளுடன் சுகாதார அமைச்சருக்கு தொடர்பு

மருந்துப் பொருள் மோசடி நடவடிக்கைகளுடன் சுகாதார அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக ஜே.வி.பி. கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
 
தரம் குறைந்த மருந்துப் பொருள் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக அனுமதி வழங்கி வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

jvp-logoபாவனைக்கு ஒவ்வாத தடுப்பூசி வகைகளைப் பயன்படுத்திய காரணத்தினால் அண்மையில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
காலவதியான, தரத்தில் மிகவும் மோசமான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களை சுகாதார அமைச்சர் பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் தெரவித்துள்ளார்.
 
மிகவும் மலிவான விலைக்கு இந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் சுகாதார அமைச்சருக்கு தரகுப் பணம் கிடைக்கப் பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தரமற்ற மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சே விநியோகம் செய்துள்ளதாகவும், வெறுமனே டாக்டர்களையும் தாதியரையும் இந்த சம்பவத்தில் பலிக்கடாக்களாக மாற்ற முயற்சி செய்யக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சுகாதார அமைச்சிற்கு 5500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.