திருமாவளவனும், இலங்கைத் தமிழர் மீதான பற்றும் – தமிழ்மகன் ஒருவனின் ஆதங்கம்

இந்திய அரசியல் வாதிகளின் கூட்டத்தினரை சந்தித்துப் பேசியபோது பிரபாகரனின் நண்பரான உங்களையும் கொலைசெய்திருப்பேன் என மகிந்த கூறியதும் தன்மானத் தமிழன் திருமாவளவன் பெரும் மகிழ்சியோடு     புன்னகைத்துள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் எத்தனை கோடி ஆண்டுகள் சென்றாலும் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தாமாகவே போராடவேண்டும் என்பதை தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் வெறும் வானத்தை பார்த்து நிலாச்சோற்றுக்காய் ஏங்கும் பேதைகளாக தமிழ் மக்கள் வழக்கூடாது.

தமிழ் மக்களை கொலைசெய்து குவித்து அக்குவியலின் உச்சியில் நின்று வெற்றிப் பெருமிதத்தோடு மார்புதட்டும் கொலைஞன் இராஜபக்ச உன்னையும் கொலை செய்திருப்பேன் எனக்கூறியும் தமிழ் மக்களின் காவலன் தங்கத்தமிழ் மகன் வீரத்தமிழன் திருமாவளவன் தனது புன்சிருப்பினை உதிர்த்தவண்ணம் தனது அரசியல் சாணக்கியத்தை திறமையாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்க்காக இறுதி மூச்சுவரை குரல் கொடுப்போம் என தேர்தலுக்கு முன்னர் கொக்கரித்த வீரமறவன் திருமாவளவனுக்கு இலட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த உங்களுக்கு எனது உயிரைப்பறிப்பது சிரமம் இல்ல இதோ இப்போதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி தனது மார்பை நிமிர்த்திக்காட்டி ஒட்டுமொத்தத்தமிழர்களின் மானத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் வராமை தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் அனைவரும் தமிழ்மக்களை விற்றுப் பிழைக்கும் பச்சோந்திகள் என்பதை பறைசாற்றியுள்ளது.

இந்தியாவையும் தமிழகத்தையும் நம்பியே தமிழர்போராட்டம் சோரம்போயுள்ளது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் நன்றாக சம்பாதித்துக் கொண்டனர் என்பதே உண்மை.

கருணாநிதியும்,ஜெயலலிதாவும் தமிழர்களின் சாபக்கக்கேடுகள் என்பதை தமிழ்மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளில்லை என்றால் தமிழினம் தலை நிமிர்ந்துகொள்வது சாத்தியமில்லை.

tamils-night-flagஎனவே தமிழ் இளம் சமுகமே நமக்காக நாமே போராடுவோம். எமது போராட்டத்தை உயிர்த்தெழச்செய்வதற்கான முயற்சிகளில் ஒருங்கிணைவோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.