என் அண்ணனை நான் காட்டிக் கொடுப்பதா

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான்.  இன்று திருவண்ணாமாலையில் மாசிலாமணி திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாலை 6.15க்கு நடந்த கூட்டத்தில் சீமான் தலையேற்றார்.

naam-thamilarஇக்கூட்டத்திற்காக மண்டபத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.  போலீசார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் இயக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். பதட்டம் நிலவியதால் அங்கே 200போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் சீமான் சாலை மறியல் தேவையில்லை. அவர்களுக்கு வேறு விதத்தில் பதிலடி கொடுக்கலாம் என்று சொல்லி சாலை மறியலை தவிர்த்தார்.

இது பெரியார் கண்ட கனவு

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். இன்று திருவண்ணமலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

மாசிலாமணி திருமனமண்டபத்தில் மாலை 6.15 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்தில் சீமான் 1 1/2 மணி நேரம் எழுச்சி உரை ஆற்றினார்.

‘’தமிழனின் இன உணர்வை அரசியல்வாதிகள் குறைத்துவிட்டார்கள்.  தமிழனை இன உணர்வுள்ள தமிழனாக வாழ வைப்பதற்குத்தான் நாம் தமிழர் இயக்கம் உருவாயிற்று.

உலகில் தமிழனுக்கு எங்கே பிரச்சனை என்றாலும் அங்கே நாம் தமிழர் இயக்கம் நிற்கும்.  தமிழனை தமிழந்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு.  அந்த கனவை நிறைவேற்றுவோம்’’என்று பேசினார்.

அடி, உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்

‘’நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம்.  மே-17ல் இதற்கான மாநாடு நடைபெறும். அதன் பிறகு அடிக்கு அடி; உதைக்கு உதைதான்.

அடி,உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்’’என்று அழைப்பு விடுத்தார்.

பிரபாகரனை காட்டிக்கொடுக்க மாட்டேன்

எழுச்சி உரைக்கு பின் உணர்வாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.  அப்போது பிரபாகரன் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு சீமான்,  ‘’பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.  தமிழ் இன உணர்வாளர்கள் இதை நம்புகிறோம்.  ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று மட்டும் கேட்காதீர்கள்.  நான் சொல்லமாட்டேன்.

அப்படி சொல்லி பிரபாகரனை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை’’என்று உணர்ச்சிபூர்வமாக பதில் அளித்தார்.

திமுக, அதிமுகவை தேர்தலில் எதிர்த்து வெற்றி பெருவேன்

நாம் தமிழர் இயக்கத்தை வரும் மே17ல் அரசியல் இயக்கமாக மாற்றப்போகிறீர்கள் என்கிறீர்கள்.  ஆனால் 2014ல் தான் தேர்தலில் நிற்பேன் என்கிறீர்கள். ஏன் இந்த இடைவெளி?

மற்ற கட்சிகள் போல் இதுவும் ஆகிவிடுமா? இல்லை எந்த விதத்தில் வேறுபடும்?என்று கேள்விகள் கேட்டனர்.

அதற்கு சீமான்,  ‘’திமுக,அதிமுக கட்சிகளை விட இந்த இயக்கதை வலுப்படுத்திவிட்டுத்தான் தேர்தலில் இறங்கவேண்டும்.

இந்த இயக்கம் திராவிட கட்சிகள் போல் செயல்படாது.  முற்றிலும் வேறுபடும்.  மக்களுக்காக தமிழனுக்காக பாடுபடும்’.  திமுக,அதிமுகவை விட இந்த இயக்கம் வெல்லும்’என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.