எப்பொழுது ம‌கி‌ந்த ராஜப‌‌க்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் தீபாவளி

ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது ம‌கி‌ந்த ராஜப‌‌க்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும்.

nerudal-karutthu-nerudal-150x148நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும். நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது?

தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்…

உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே.

அதேபோன்று தான் வன்னியில் நாளும் செத்த வீடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் போது நாம் எப்படி இந்நாளை ஓர் திருநாளாகக் கொண்டாடுவது? எப்பொழுது ராஜப‌‌க்சே நரகாசுரன் அழிந்தொழிந்து போகிறானோ அன்று தான் நம்மினத்தவர் வாழ்வில் ஒளிவீசும்.

இந்துக்களுக்கு வேண்டுமானால் இன்றைய நாள் தீபாவளி திருநாளாக இருக்கலா‌ம், ஆனால் ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளித் திருநாள் அல்ல. ஆகவே உண்மையான தமிழர்கள் இன்றைய நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடக் கூடாது.

புராண காலத்தில் நரகாசுரன் ராஜப‌‌க்சேவாக இருந்திருப்பான் போல் தெரிகிறது. தற்போதைய கலியுகத்தில் இரண்டு உருவங்களாக பிறந்துள்ளான். ஒன்று ராஜப‌‌க்சேயாகவும் மற்றது சர‌த் பொ‌ன்சேகராகவு‌ம் பிறந்திருக்கிறான்.

புராண காலத்தில் நரகாசுரன் பூமித்தாய்க்கும் திருமால் என்னும் தெய்வீக சக்திக்கும் பிறந்தவன். ஆனால் எங்கள் இனத்தை அழிக்கப் பிறந்த ராஜப‌‌க்சே நரகாசுரன், ட‌ன்டினா ‌திசநாயகேவுக்கு பிறந்தவன்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.