17-10-2009: பிரான்சில் “சுதந்திர தாகம்” பேரணி

Suganthirathaagam_Enru_Thaniyum_

சிறிலங்கா அரசின் வதைமுகாம்களுக்குள் வாழும் உறவுகளை விடுதலைசெய்யக்கோரி மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

உலக நாடுகளிடம் கையேந்தி பெரும் அழிவாயுதங்கள்கொண்டு தமிழினத்தின் பல்லாயிரம் உயிர்களை பலியெடுத்து இரத்தக்கறைகளில் தோய்ந்தபடி சிங்களப்பேரினவாதம் தொடர்ச்சியான மனிதவுரிமை மீறல்களை செய்து வருகிறது.
பட்டிணி ஓலங்களும், சாவுகளும் மலிந்துபோய், குரல்வளை நெரிக்கப்பட்ட மனிதர்களாய், அடக்குமுறையின் உச்சமாய் பெரும் துன்பத்துக்குள் வாழும் மக்களை விடுதலைசெய்யக்கோரி பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் சுதந்திர தாகம் பேரணியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்தப்பேரணியை எழுர்ச்சியாக்கி எமது மக்களின் வாழ்விற்க்கு உதவிட பிரான்சில்வாழும் அனைத்து உறவுகளையும் தவறாது இந்தப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.

இடம்: – Port-Royal (RER-B) இல் இருந்து Place Valhubert வரை

காலம் – 17.10.2009 சனிக்கிழமை
நேரம் – 14.00மணி

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.