பிரித்தானியாவில் 7 ஆவது கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

photoசிறீலங்கா அரசாங்கத்தின் பல வாக்குறுதிகளை நம்பி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் முகாம்களிற்கு உள்ளே பல மைல்கள் நடந்து திரிந்து தங்கள் விடுதலைக்காக அல்லல் படும் வேளை அந்த மக்களின் குரலாக இருக்கும் புலம்பெயர் மக்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதே போல் பிரித்தானியாவில் இன்றுடன் 7 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறீலங்கா அரசாங்கத்தின் செயலை கண்டித்து வதைமுகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்கும் படி பிரித்தானிய பிரதமரிடம் ஒரு கோரிக்கை வைத்து அவரின் காரியாலயத்தின் முன் நூற்றுக்கணக்கான மக்கள் கோரிக்கை எழுப்பினர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 7 மணி வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.