கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவி தற்கொலை

முல்லைதீவைச் சேர்ந்த மாணவி ஒருவர் வியாழன் இரவு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் துணக்காய் வீதி, நட்டான் கண்டத்தைச் சேர்ந்த நிருஷா தனபாலசிங்கம் என்ற மாணவியே தற்கொலை செய்துள்ளார். தற்பொழுது காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, மேற்படி மாணவி முல்லைத்தீவிலிருந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண்கள் தங்கு விடுதியில் தங்கி படித்து வந்தாகவும், அண்மையில் முல்லைத்தீவில் இராணுவ நடவடிக்கையினால் அதிகமாக மக்கள் உயிரிழந்தும் காயப்பட்டும் வருவதனால், தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட காலமாக தொடர்பு இல்லாது மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தற்கொலை செய்வதற்கான காரணத்தை விளக்கி கடிதம் எழுதி வைத்திருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.