நாங்கள் சாவமே தவிர இலங்கைக்கு திருப்பி செல்ல மாட்டோம் – உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்கள்

அவுஸ்ரேலியாவுக்குக் கடல் மூலமாகக் கப்பலில் பயணம் செய்யும் போது இந்தோனேசியா அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 255 தமிழர்கள் கப்பலில் இருந்தபடியே தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.

தமக்கு அரசியல் தஞ்சம் அளிக்குமாறு உலகநாடுகளிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்தோனேசியா அதிகாரிகளில் அவர்களைக் கப்பலில் இருந்து இறங்குமாறும், அவர்களுக்கான தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ள போதும் அவர்கள் அதனை மறுத்து தமக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 

சிறுவர்கள் பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த 255 பேரும் இலங்கைத் தமிழர்களாவர். 

இதேவேளை உலக நாடுகளில் தஞ்சமடையும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், உலக நாடுகளுக்கு இது ஒரு பிரச்சிiனாயக இருப்பதாகவும் அவுஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.

ஜெனீவா சாசனத்தை மதித்து நடக்காத ஒரு நாட்டிலிருந்து  பெரும் படுகொலைகளிலிருந்து தப்பி வரும் மக்களைப் பற்றிய அபிப்பிராயம் நியாயமானதல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது நாஸி ஜெர்மானியப் படுகொலைகளிலிருந்து தப்பி வந்த மக்களை திரும்பி ஜெர்மனிக்குப் போ என்று சொல்வதற்கு ஒப்பானது என்றும் அவர்கள் கண்டித்துள்ளனர். 

அதேபோன்று அவர்களை பொருளாதார அகதிகளாக இனம்காண்பதும் தவறானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் பிரதேசங்களில சொந்தமான வாழிடங்களையும் சிறந்த கல்விப் பின்புலத்தையும் கொண்ட அவர்களை வெறும் பொருளாதார அகதிகளாகக் கணித்து விட முடியாது என்று ஒரு சாரார் வாதிட இன்னொரு சாராரோ அவ்வாறு கொண்டாலும் அதில் தவறேதுமில்லை. ஆனால் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறார்கள்.

தமது  நாட்டில் இனரீதியாகப் படுகொலையை எதிர்கொண்டு தமது உறவினர்கள் நண்பர்களையும் இழந்தது மட்டுமன்றி பொருளாதார ரீதியான பாரபட்சத்தையும் எதிர்கொண்ட அவர்கள் தமது குழந்தைகளுடைய எதிர்காலத்தைக் கருதி இடம்பெயர்வது ஒன்றும் தவறானது அல்ல. ஆடிப்படை மனித உரிமைகளை வலியுறுத்தும் வளர்ந்த நாடுகளாகிய நாம் அவர்களைப் பாதுகாத்தாக வேண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும்  எனவும் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.