உனக்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் பிரபாகரனை தட்டி எழுப்படா தமிழா….!!!

தாங்கொணா துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் என்னருமை உறவுகளே…! அங்கங்களை இழந்து உறவுகளை இழந்து துயரங்களை சுமந்து மனம் முழுதும் ரணமாய் இருக்கும் என் இரத்தங்களே….!

தோற்றாடா போனோம் இல்லையடா…! தலைவன் காட்டிய பாதை இருக்க…. தாயகம் காக்கும் தளபதிகள் இருக்க… துவண்டு போகா கவிஞர்கள் இருக்க…! சோரம் போகா மானமறத்தமிழன் இருக்க ….. வென்று விட்டானாடா சிங்களன். முள்ளி வாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டதாக உனக்கு சொன்னவன் யாரடா…?

யாரடா எங்கள் தலைவன் அனலிடைக் குதித்தவனடா…! ஆற்றல் மிக்கவன் அவன். ஆற்றல் மிகுந்த வல்லரசுகளை ஆட்டி வைத்தவனடா அவன். இருபது நாடுகளின் நயவஞ்சக யுத்தத்தை 3 வருடங்களாக எதிர்த்து நின்றவனடா அவன்…! முள்ளி வாய்க்காலின் நந்திக்கடலோரம் சிங்களவன் காட்டுகின்ற அடையாள அட்டையையும் எடுத்துக்கொண்டு அம்புலன்ஸில் ஓடிச் செல்வானா எம் தலைவன்! சொல்லடா..? இதுதானா உங்கள் தலைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கை எல்லாமே…! தன் உடலின் எலும்புகூட எதிரியிடம் எட்டக்கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்த்தவனடா எங்கள் தலைவன். சிங்களன் பாசறையில் சரணடைந்து உச்சந்தலையில் காயம் பட்டு சித்திரவதைப்பட்டு இறந்து அதை துணியைப் போட்டு மூடி அப்படியும் இப்படியும் பிரட்டிக் காண்பித்துவிட்டால் அதை நம்பும் பேய்க் கூட்டமாடா ஈழத் தமிழினம்…? மஞ்சள் துண்டை தாய் சீலையில் முடிந்து வைந்திருந்ததை தங்கமென்று நம்பி அவளின் கழுத்தறுத்த இனமடா சிங்கள இனம். கேட்பவன் கேனயன் என்றால் எருமைமாடு ஏரோபிளேன் ஓடுமாம். தமிழன் என்ன கேனயனாடா…?

உங்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். பிரபாகரனுக்கு மட்டும்தானாடா தமிழீழம் வேண்டும். உங்களுக்கு வேண்டாமாடா..? அடேய் துரோகி மானங்கெட்ட ஈனப்பிறப்பே கருணா உனக்கு தாய் நிலம் வேண்டாமா…? எடேய் ஆனந்த சங்கரி அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழப் பிரகடனம் எடுத்தபோது பகிரங்க மடல் ஏண்டா எழுதவில்லை. அடேய் டக்ளஸ்..! காரைநகர் கடற்படை முகாம் தாக்கியதாய் கதைவிடுகிறாயே… ஏனடா தாக்கினாய்.. அங்கிருந்த கடல் நீரை அள்ளி வரவா ..? சிங்களன் கேட்டால் அம்மாவையே கூட்டிக் கொடுப்பானாடா தமிழன்…? பாவிகளே சிந்தியுங்களேன்டா..! எல்லாவற்றையும் அழித்துவிட்டீர்களேயேடா..! இனியென்றாலும் ஒன்றுபடுவீர்களாடா…!

என்னருமை உறவுகளே…. எங்கள் ஒவ்வொருவனுக்கும் சுதந்திரம் வேண்டும். தும்மி இருமுவதற்கும் வெம்பி அழுவதற்கும் சுதந்திரம் கட்டாயம் வேண்டும். என்ன வழியிலேனும் அதை நாங்கள் பெற்றாக வேண்டும். சிங்களக் கட்சிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கும் என்னருமைச் சகோதரங்களே விட்டுவிடுங்கள். பேரினவாதம் ஒருநாள் உங்களையும் அழித்துவிடும். அற்ப சலுகைகளுக்காக அன்னை மண்ணை அடகு வைக்காதீர்கள். பிரபாகரன் யார்…! அவன் ஒரு சுதந்திர புருஷன். உங்கள் தன்மானத்தை தட்டி எழுப்பியவன். ஆளவேண்டும் என்று அவன் ஆசை கொண்டிருந்தால் இப்போது ஒரு சிங்களத்தீவின் அமைச்சராக நிச்சயம் இருந்திருப்பான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எத்தனை துரோகங்கள் எத்தனைநாட்டு கொடுமைகளுக்குள்ளாக அவன் போராடினான். நாங்கள் எல்லோருமே அவனுக்கு துணையாக நின்றிருந்தால் இப்படி அழவேண்டி வந்திருக்காது அல்லவா…! அழவேண்டாம் உறவுகளே ….! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு பிரபாகரன் இருக்கிறான். அவனைத் தட்டி எழுப்புங்கள். தாய் மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் சூழல் தோன்றுவதற்காக எந்த வகையிலேனும் போராடுங்கள். அது அகிம்சை வழியோ அராஜக வழியோ எண்ணியது முடிப்பதற்காய் எழுங்கள்.. தலைவன் இருக்கிறான் உங்கள் எழுச்சி கண்டு அவன் மனம் மகிழட்டும் அடுத்த வருடம் அவனுக்கு நாம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டுமல்லவா…! தாய்நிலம் விடுதலை பெற்ற செய்தியை அவனுக்கு பரிசாக அழிப்போம்.

கொண்ட லட்சியம் குன்றிடாதெங்கள்
கொள்கை வீரரின் காலடி மண்ணிலே
நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம்
நிச்சயம் தமிழ் ஈழும் காணுவோம்..

யாழப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.