இலங்கையில் இருந்து புலம்பெயரும் தமிழர்கள்: மேலும் ஒரு கப்பல் கொலம்பியக் கடலில் தடுத்துவைப்பு

இலங்கையைச் சேர்ந்த அரசியல் தஞ்சம் கோருவோரைக் கொண்ட கப்பல் ஒன்றை பிரிட்டிஷ் கொலம்பிய கடலில் வைத்து கனடிய காவற்துறையினர் கடந்த சனிக்கிழமை தடுத்து வைத்துள்ளனர்.


boat-peopleகனடியக் கடற்படையினராலும் இரண்டு காவற்துறையினராலும் இக்கப்பல் பாதுகாப்பாக விக்ரோறியாவில் உள்ள துறைமும் ஒன்றிற்கு  அழைத்து வரப்படுகிறது.  ஓஷன் லேடி என்ற பெயரைக் கொண்ட இக்கப்பலில் 76 பேர் உள்ளனர் எனவும் சனிக்கிழமை காலை அது கனடியக்கடற்பரப்புக்குள் நுழைந்ததாகவும்  கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் லோன் தெரிவித்துள்ளார்.

அக்கப்பல் எங்கிருந்து வந்தது என வினவிய போது அது இலங்கையிலிருந்து வந்ததாகத் தெரிய வருகிறது. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
சனிக்கிழமை மாலை நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இக்கப்பலில் 76 பேர் உள்ளனர் எனவும் அவர்களின் நோக்கம் கனடாவுக்குள் பிரவேசிப்பதே என்றும் கனடிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.