சிறிலங்கா தாக்குதல் விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது

kfir1இலங்கை விமானப்படையின் விமானம் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஜெட் விமானம் அடையாளம் காணப்படாத மக்கள் இலக்குகள் மீது தாக்குதலை ஆரம்பித்த போது ஆகாயத்திலேயே வெடித்துச் சிதறியதைக் கண்டதாக இரணைப்பாலை மக்கள் தெரிவித்துள்ளனர். வானத்தில் இது வெடித்துச் சிதறி கீழ்நோக்கி வந்ததையும் வானம் ஒரே புகை மூட்டமாகக் காணப்பட்டதையும் அவர்கள் அவதானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் உடைவுகள் விழுந்த பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதனை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இலங்கை இராணுவம் மேற்கு புதுக்குடியிருப்பைச் சுற்றிவளைத்து கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானப்படையின் இந்த விமானம் எந்த ரகத்தைச் சேர்ந்தது என்றும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இலங்கை விமானப்படையினர் இஸ்ரேலியத் தயாரிப்பான கிபிர் மற்றும் மிக் 27 விமானங்களை இக்குண்டு வீச்சுகளுக்குப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எந்த ஆயுதத்தால் விமானம் தாக்கப்பட்டது என்பது பற்றியும் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் உள்நாட்டுப் போரை அவதானித்து வரும் பாதுகாப்பு செய்தியாளர்கள் விடுதலைப் புலிகளிடம் சாம் 7 போன்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இல்லை என்று குறிப்பிட்டு வந்துள்ளனர்.

இந்த விமானத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகளோ அரசு தரப்போ இதுவரை தகவல் எதனையும் வெளியிடவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.