ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்காது?

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகலாம் எனத் தெரியவருகிறது. இதுகுறித்து நாளைய தினம் ஐரோப்பிய ஒன்றியம் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. இந்த வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகலாம் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

eu-flag-buttons-plus-nato-and-eu-thumb4763120இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்காது போனால் இலங்கையில் ஆடைத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.